எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் திரும்பாமல் முன்னேறும் வகையில் வேகமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக நகர தினத்தை முன்னிட்டு நகர அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
எந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாரிய நகரம் ஒன்றிலேயே தங்கியுள்ளது.
இலங்கையிலும் அவ்வாறான பெரு நகரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இந்து சுமுத்திரத்தில் பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் அவ்வாறான பெரு நகரம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இதற்குஹம்பாந்தொட்டை ஒரு பிரச்சினையாக இருந்தது.
அங்குள்ள துறைமுகத்தாலும், மத்தலை விமான நிலையத்தாலும் பாரிய கடன் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
தற்போது சீனாவின் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினையை தீர்க்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றை சீனாவின் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதன் ஊடாக, அரசாங்கத்துக்கு 1 மில்லியன் டொலர்கள் வரையில் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு துரித தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.