இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் பொது மக்களிடம் கையளிப்பு

331 0

jaffna-1யாழ்ப்பாணம் – கீரிமலை – மாவட்டபுரம் பகுதியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்கபுரம் என்ற பெயரில் இந்த வீட்டுத் திட்ட பிரதேசம் அழைக்கப்படுகிறது.

இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயனாளிகளுக்கு இந்த வீடுகளை கையளித்தார்.

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்த மக்களுக்காக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ருவான் விஜயவர்தன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.