இலங்கை, காவற்துறை ஆட்சி நாடாக மாறுவதற்கு புதிய தீவிரவாத ஒழிப்பு சட்ட மூலம் அடித்தலமாக அமையவிருப்பதாக உலக சோசலிச சமுகம் எச்சரித்துள்ளது.
அதன் இணையத்தளத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக புதிதாக தீவிரவாத ஒழிப்பு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.
இதன் ஊடாக காவற்துறையினருக்கு அதீத அதிகாரம் வழங்கப்படவுள்ளதாக அந்த இணையத்தளத்தில் வெளியாக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.