கொழும்பு மட்டக்குளியவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் இன்று மரணமானார்.
இதனையடுத்து குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை 13பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சம்பவம் தொடர்பில் கைதான 13 பேருக்கு விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி – சமித்திபுர பகுதியில் கடந்த 23ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றது.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ‘குடு ரொசான்’ உள்ளிட்ட 13 பேரை எதிர்வரும் நொவம்பர் மாதம் 11ம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.