யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவரை சந்திக்க உள்ளனர்.

330 0

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d123யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், மேற்கொண்டு வந்த எதிர்ப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை இயல்புக்கு கொண்டுவரும் வகையில் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் தலைமையில் இன்று சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன்பின்னரே போராட்டத்தை கைவிட மாணவர்கள் இணங்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.