மத்திய வங்கியின் முறிவிற்பனையில் மோசடி மேற்கொள்ளப்பட்டதாக கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் எதிர் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
மஹிந்த தரப்பின் கூட்டு எதிர்க்கட்சியின் 11பேர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியினர் கோரியுள்ளனர்.
இதேவேளை கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, மத்திய வங்கியின் முறி முறைக்கேட்டு குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிவிலகவேண்டும்.
இல்லையேல் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று எச்சரித்துள்ளார்.