இத்தாலியில் இடம்பெற்ற நில அதிர்வினால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தினால் இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இத்தாலியின் மத்திய பகுதியில் இடம்பெற்ற நில அதிர்வினால் பாரிய அளவில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் காயமடைந்துள்ளனர்.
இந்த நில அதிர்வு 6.6 மங்னிடியுட் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.