பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர். மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிரதமரின் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் பிரதமருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.