யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் – மஹிந்த

288 0

80026898_025259546-1இன்னும் கொஞ்ச நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரசியல் சாசனம் ஒன்றின் ஊடாக நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றது என  குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

சூரியவௌ பிரதேசத்தில் நடபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற் திட்டங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென என எச்சரிக்கை விடுத்துள்ள அவர் யாழ்ப்பாணத்திற்கு தொடர்ந்தும் செல்லக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.