யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதிகோரி கதவடைப்பு போராட்டம்

244 0

14639627_567583513446880_3828434266333329376_nயாழ்.பல்கலைகழக வாயிலை திறக்குமாறு கோரி மாணவர்களை துணைவேந்தர் கோரியதை அடுத்து மாணவர்களுக்கும் துணைவேந்தருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.

யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு நீதி கோரி சக மாணவர்கள் இன்று காலை முதல் பல்கலைகழக வாயில் கதவினை மூடி நிர்வாக செயற்பாட்டை முடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் பல்கலைகழக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் பல்கலைகழகத்தினுள் செல்ல முடியாத நிலை பல்கலை கழக சூழலில் நிற்கின்றனர். அந்நிலையில் காலை 9.30 மணியளவில் பல்கலைகழகத்திற்கு வருகை தந்த துணைவேந்தர் சகலரையும் பல்கலைகழகத்தினுள் செல்ல அனுமதிக்குமாறு கோரினார்.

இதனால் மாணவர்களும் துணைவேந்தருக்கும் இடையில் நீண்ட கருத்து மோதல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளை மாத்திரம் பல்கலைகழத்தினுள் செல்வதற்கு மாணவர்கள் அனுமதித்தனர். ஏனையவர்களை தொடர்ந்து பல்கலைகழகத்தினுள் செல்ல மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

இதேவேளை இன்றைய தினம் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் யாழ்.பல்கலைகழகத்திற்கு நேரில் விஜயம் மேற்கொண்டு பல்கலைகழக நிர்வாகம் மற்றும் மாணவ பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.