இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து

296 0

201610310538116981_this-diwali-no-exchange-of-sweets-between-bsf-amp_secvpfதீபாவளியையொட்டி இனிப்பு பரிமாற்றம் நடைபெறவில்லை என எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் அட்டாரி, வாகா எல்லையில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தீபாவளி, ரம்ஜான், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

ஆனால் இந்த முறை எல்லையில் நடந்துவரும் சண்டை காரணமாக இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தீபாவளியையொட்டி இனிப்பு பரிமாற்றம் நடைபெறவில்லை என எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் தெரிவித்துள்ளது.