சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

302 0

201610301538049708_us-russian-japanese-astronauts-return-from-iss_secvpfவிண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிந்து பல்வேறு ஆய்வுகளை செய்துவந்த மூன்று விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பி, கஜகஸ்தான் நாட்டில் தரையிறங்கினர்.பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த கேட் ருபின்ஸ், ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோஸ்-ஐ சேர்ந்த அனடாலி இவானிஷின், ஜப்பான் நாட்டின் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த டக்குயா ஓனிஷி ஆகியோர் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியிருந்து மரபணுக்கள் தொடர்பான ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு வகை ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் மூவரும் தங்களது ஆய்வுகளை முடித்துகொண்டு ரஷியாவின் ’சோயுஸ்’ விண்கலத்தின் மூலம் இன்று கஜகஸ்தானில் உள்ள ழெஸ்கஸ்கான் நகரிம் ஒரு தாழ்வான பகுதியில் இன்று பத்திரமாக தரையிறங்கினர்.

அங்கு தயாராக காத்திருந்த மீட்புப் படையினர் அவர்களை ஆசுவாசப்படுத்தி, பூமிக்கு வரவேற்றனர்.