ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி

307 0

201610302005317773_afghanistan-19-let-militants-killed-in-airstrikes_secvpfஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்கிய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலியானார்கள்.ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள டங்கம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் ஒரு குழு தங்கியிருந்து எல்லை வழியாக ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்து நாசவேலைகளில் ஈடுபட இருப்பதாக ஆப்கானிஸ்தானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் ஆப்கானிஸ்தான் அப்பகுதியில் தீவிரவேட்டை நடத்தி அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 19 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 8 தீவிரவாதிகள் காயம் அடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ‘‘டங்கம் மாவட்டத்தில் தீவிரவாத குழுவை முற்றிலும் அழிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

ஆனால், ஆப்கானிஸ்தான் ராணுவம் தனியாக இந்த தாக்குதலை நடத்தியதா அல்லது சர்வதேச கூட்டுப்படையுடன் இணைந்து நடத்தியதா என்ற தகவலை வெளியிடவில்லை.

தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி மற்றும் பயிற்சி அளிப்பதன் மூலமாகவும்,  ஆப்கானிஸ்தான் பொதுமக்களுக்கு எதிராக தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்வதன் மூலமாகவும் பாகிஸ்தான் ஆப்கன் மீது அறிவிக்கப்படாத போரை நடத்தி வருகிறது என்று ஆப்கானிஸ்தான் துணை அதிபர் சர்வார் டனேஷ் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இதுகுறித்து ஐ.நா. சபையிலும் வலியுறுத்தினார் என்பது குறுப்பிடத்தக்கது.