ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண்ணிற்கு ஆயுள் தண்டனை

251 0
ஹெரோயின் 6.33 கிராமை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியான பெண் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மஹேந்திரனினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியை சேர்ந்த பெட்ரிக் டேவிட் மேரி எனும் 36 வயதுடைய பெண் ஒருவருக்​கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ​போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண் 160,000 ரூபா பெறுமதியான 6.33 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் இவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் பிரதிவாதியான பெண்ணிற்கு எதிராக சந்தேகமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.