தவறுகளை திருத்தினால் ஜனாதிபதிக்கு வாய்பளிக்கலாம் – ஆசுமாரசிங்க

255 0

நல்லாட்சியின் கொள்கைகளில் இருந்து விலகிச்சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருடைய தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் வருவாராயின் அவரை இணைத்துக்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம். அதற்கென குறிப்பிட்டதொரு காலத்தை வழங்குவதில் தவறில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

அதேவேளை ஜனாதிபதி என்ற வகையில் அவரால் நிறைவேற்றப்படாத பணிகளை செய்வதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது. எதிர்வரும் வாரங்களிலேனும் அவரால் பூர்த்தி செய்யப்படாத விடயங்களை செயற்படுத்துவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் அண்மையில் எமது பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. அந்த விஞ்ஞாபனத்தில் பல்வேறு எழுத்துப்பிழைகளும், பொருட்பிழைகளும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.