கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான ‘தெனுவரமெனிக்கே’ என்ற பெயரில் புதிய நகராந்த கடுகதி ரயில்சேவை ஒன்று எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து இராஜங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு பதுளை நோக்கி புறப்படும் இந்த கடுகதி ரயில் மறுநாள் பதுளை ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி புறப்படும்.
குறித்த கடுகதி ரயிலில் காட்சி கூடங்கள் மற்றும் முதலாம் , இரண்டாம் ஆசன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்த ரயிலில் பிரயாணம் செய்ய விரும்பும் பயணிகள் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்துக் கொள்ளலாம்.