புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பின்னரே தீர்க்கமான முடிவு – சித்தார்த்தன்

310 0

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்தினாலும் நாளைய தினம் இறுதித் தீர்மானம் ஒன்றினை எட்டமுடியாது என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

அத்துடன் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் அவதானித்த பின்னரே இது தொடர்பில்  தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.