புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் வரைவு தொடர்பான இடைக்கால அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக கருத்துக்களை முன்வைப்பதற்காக சட்டமா அதிபர் அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிற்கு சமூகமளித்ததாக குழுவின் செயலாளரான நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் முறைமை, அதிகாரத்தை பரவலாக்குதல் போன்ற விடயங்கள் குறித்து தற்போது விரிவாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி அரசியலமைப்பு நடவடிக்கை குழு பிரதமர் தலைமையில் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.