தமது போராட்டத்திற்கு தீர்வினை வழங்கும் வேட்பாளருக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்போம் என தொடர் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவித்த அவர்கள், தமக்கு மாற்று நிலங்கள் வேண்டாமென்றும் தங்களின் நிலங்களே வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.
மாற்றுக் காணி கிடைத்திருந்தால் எப்போதோ தமது வாழ்வாதார்தை மாற்றியமைத்திருப்போமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக வருபவர்களில் யார் தமது காணிகளை மீட்டுத் தருவார்களோ அவர்களுக்கே ஆதரவு வழங்குவோம் எனவும் கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.