இலங்கை – சீனா இடையில் சிறுநீரக நோய் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்

323 0

1506284839chinaசிறுநீரக நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிதல் சம்பந்தமாக இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சார்பாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சீனா சார்பாக அந்நாட்டின் விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

நாட்டின் 12 மாவட்டங்களில் பரவலாக காணப்படுகின்ற சிறுநீரக நோய் தேசிய அனர்த்தம் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இந்நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது வடமத்திய மாகாண மக்கள் என்று அந்த அமைச்சு கூறியுள்ளது.

சீனாவுடனான இவ் ஒப்பந்தத்தின் ஊடாக, குறித்த நோய்க்கான காரணங்களை கண்டுபிடித்தல் மற்றும் சிறுநீரக நோயினை ஆரம்பத்திலே அறிந்து கொள்வதற்கான ஆய்வு உபகரணங்கள் வழங்குதல் உட்பட சிறுநீரக நோயாளர்களின் தரவுகளை நவீன உலகத்திற்கு ஏற்றவகையில் புதுப்பித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக சீனாவின் விஷேட நிபுணர் குழுவொன்று டிசம்பர் மாதத்தில் இலங்கை வரவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.