வீடொன்றினை உடைத்து உட்புகுந்து திருட்டில் ஈடுபட்டவர்களென்று கருதப்பட்ட மூன்று பெண்கள் உள்ளிட்டஒன்பது பேரை வெளிமடைப் பகுதியில் வைத்து போகம்பறைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
போகம்பறைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிசார் குறித்த ஒன்பது பேரையும் கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியையும் மீட்டனர்.
போகம்பறைப் பகுதியின் குருந்துகொல்லை என்ற இடத்தின் வீடொன்றின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் பணம், நகைகள், கையடக்கத் தொலைபேசிகள், மின் உபகரணங்கள் போன்ற பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த வீட்டுரிமையாளர் வீட்டிற்கு வந்த போது வீடு உடைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார். அம்முறைப்பாட்டில் 26 இலட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
போகம்பறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது பேரும் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.