பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை

326 0

1267898144pujithமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு பூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறுகிறார்.

இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

மஹியங்கனை, ரிதிமாலியெத்த பிரதேசத்தில் புதி பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.