நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கடற்படையினரை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தென் மாகாணத்தின் தவலம மற்றும் நெலுவ பகுதிகளில் கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அந்தந்த பிரிவுகளில் கடற்படையின் விரைவு தகவல் பிரிவு, மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU), கடற்படை டைவிங் பிரிவு ஆகியன கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த நாட்களில் பெய்த கடும் மழையால் வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்றவும் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இதற்கமைய வெள்ள நீர் வெளியேற்ற தடையாக உள்ள பாலங்கள், கால்வாய்கள், குழாய்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய காலி மாவட்டத்தின் தோடங்கொட பாலம் நேற்று (28) சுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.