தேசிய மக்கள் சக்தியே எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிப்பணியாமல் தாய் நாட்டின் மீது உண்மையாக அன்பு செலுத்தும் ஒரு அமைப்பு என அந்த அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஹாரமாகாதேவி பூங்கா உள்ளக அரங்கில் நேற்று (27) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
தற்போது எமது நாய் நாடு எங்குள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தான் அறிந்த பலர் தேசபக்தியை கேலி செய்வதாகவும் அதுவொரு முட்டாள்தனம் என்றும் அவர் கூறினார்.
தான் நாட்டுக்கு சொந்தமானவர் என்றும் அதனால் தாய்நாட்டின் மீது உண்மையாக அன்பு செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆபத்தான சூழ்நிலைகளின் போது நாட்டைவிட்டு ஓடப்போவது இல்லை எனவும் அவ்வாறான ஒரு போலி அன்பு தாய்நாட்டின் மீது கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, அவ்வாறான விசுவாசமான தேசபக்தி அனைவருக்கும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் எனவும் நாட்டை அழிவுக்கு உட்படுத்தும் நபர்களிடம் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் கூறினார்.