சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான திலீப் தரங்க என்பவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று முன்தினம் வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதுசெய்யப்பட்டார்.
இவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எம்.ஏ.ஆர்.கே வகை ரிவோல்வர் மற்றும் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.