தமிழகத்தில் உள்ள 4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை!

243 0

தமிழகத்தில் உள்ள 4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:சர்க்கரை தொழிற்சாலைகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தை கடந்த செப். 10-ம் தேதி சென்னையில் நடத்தியதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசின் பிரதிநிதிகள், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், கரும்பு உற்பத்தியாளர்கள் ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், தமிழக சர்க்கரை தொழிற்சாலைகள், கரும்பு உற்பத்தியாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பு, சர்க்கரை துறைசார்ந்தவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, தாங்கள் அளித்த ஆலோசனையின்படி கடந்த செப்.24-ம் தேதி மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளின் மூத்த அதிகாரிகள், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், கரும்பு உற்பத்தியாளர்கள் பங்கேற்ற உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. தமிழக சர்க்கரை தொழிற்சாலைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவற்றில் இருந்து மீள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சர்க்கரை ஆலைகள் மறு சீரமைப்பு தொடர்பாக செப்.30-ம் தேதி சிறப்பு மாநில வங்கிகள் கமிட்டியின் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள்எடுக்கப்பட்டன. இந்நிலையில், சர்க்கரை ஆலைகளின் பொருளாதார நிலையை உயர்த்த தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகளை தங்கள் கவனத்துக்கு2 கொண்டு வருகிறேன்.

கடந்த 2017-18-ம் ஆண்டு கரும்பு அரவைக் காலத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 882 கரும்பு விவசாயிகளுக்கு, நியாயமான மற்றும் ஆதாய விலையைத் தாண்டிஇடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.200 என்ற வகையில் ரூ.134கோடியே 53 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 2018-19 அரவைக் காலத்தில், ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.137.50 என்ற வகையில், இடைக்கால உற்பத்தி ஊக்கத் தொகையாக ரூ.200 கோடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த 2019-20-ம் ஆண்டில் 34 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு சொட்டுநீர் பாசன திட்டத்துக்காக கூடுதலாக ரூ.68 கோடியே 35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தஆண்டில் கரும்பு உற்பத்தி அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சர்க்கரை ஆலைகளும் தங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவைதவிர, சர்க்கரை ஆலைகளுக்கு வங்கிகள், நிதிநிறுவனங்களால் வழங்கப்படும் கடன் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். விரைவில் புதிய கடன்திட்டங்களை அறிவிக்க உத்தரவிட வேண்டும். வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தாத ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

தமிழகத்துக்கு கூடுதல் சர்க்கரையை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். சர்க்கரை ஆலைகளின் நிதி நிலையை மேம்படுத்த வேண்டும். முந்தைய கடன்களை செலுத்தியிருந்தால், கரும்பு விவசாயிகளுக்கு விரைவாக கடன் வழங்கவங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள 4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.