தொழில்நுட்பம் இல்லாதது வேதனை: லதா ரஜினி

294 0

குழந்தைகளுக்கான அமைதி’ என்ற அமைப்பை நடத்தி வரும் லதா ரஜினிகாந்த் கூறும்போது, “குழந்தை விழுந்து 24 மணி நேரம் கடந்தும் நம்மால் மீட்க முடியவில்லை. ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த குழந்தையை மீட்பதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. இதுபோன்று ஆபத்தில் உதவுவதற்குதான் தொழில்நுட்பம் அவசியம் தேவை.

மனிதனால் செல்ல முடியாத இவ்வளவு ஆழமான இடத்துக்கு மனிதநேய அடிப்படையில் உதவ, தொழில்நுட்பத்தால்தான் முடியும். பல விஷயங்களில் நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளதாக கூறிவருகிறோம். ஒரு குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் நாம் எந்த விதத்திலும் முன்னேறவில்லை என்று பொருள்.

உயிரைவிட முக்கியமான விஷயம் எதுவும் இல்லை. அதுவும் குழந்தைகள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையை விடவும் பெரிய விஷயம் எதுவும் இல்லை. ஒரு வளர்ந்த சமுதாயமாக நாம் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம், ஒரு அரசாக எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்” என்றார்.