தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலையான 75 ரூபாயை நீக்குவதற்கு, நுகர்வோர் சேவை அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று, நுகர்வோர் சேவை அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது.
போட்டிமிக்க சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவே தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் நுகர்வோர் சேவை அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் வர்த்தகர்கள் தேவையற்ற விலை அதிகரிப்பில் தேங்காயை விற்பார்களாயின் மீண்டும் தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலை தீர்மானிக்கப்படுமென்று அதிகார சபை தெரிவித்துள்ளது.