இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன நிலையில் ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் காணப்பட்ட தனது மகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உரிய பதிலை வழங்கவேண்டும் என காணாமல்போன காசிப்பிள்ளை ஜெரோமியின் தாய் காசிப்பிள்ளை ஜெயவனிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது மகள் உயிருடன் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்ட காசிப்பிள்ளை ஜெயவனிதா ஒருமுறையாவது தமது மகளை காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி இரட்டை வாய்க்கால்பகுதியில் வைத்து தனது மகள் காசிப்பிள்ளை ஜெரோமிகாணாமல் போனதாக அவரது தாய் காசிப்பிள்ளை ஜெயவனிதா காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதிஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலுக்காக வெளியிடப்பட்ட நூறுநாட்களில் புதிய நாடு என்ற துண்டுப்பிரசுரத்தில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் தனது மகள்காசிப்பிள்ளை ஜெரோமி நிற்பதை தாம் கண்டு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய போதிலும் தனது மகள் தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லையென அவர் குறிப்பிட்டார்.
காணாமல் போன தனது மகள் தொடர்பில் பல ஆணைக்குழுக்களும், புலனாய்வு பிரிவினரும்விசாரணைகளை மேற்கொள்கின்ற போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லையென கவலைவெளியிடும் வனிதா ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவே தனது மகள் தொடர்பில் உரிய தீர்வை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, காணாமல் போயுள்ள தனது மகள் காசிப்பிள்ளை ஜெரோமிக்கான அவரது தாய் காசிப்பிள்ளை ஜெயவனிதா கவிதை ஒன்றையும் எழுதி பாடியுள்ளார்.
இதேவேளை, மன்னார் மடு பகுதியில் வைத்து காணாமல் போன தனது மகள் நாகஜோதி நாகராசா ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் காணப்பட்ட போதும் ஜனாதிபதி விடுதலை செய்யாமைக்கான காரணம் என்னவென்று அவரது தாயார் திருமதி நாகராசா கேள்வியெழுப்பியுள்ளார்.