பிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி!

196 0

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க, திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடை நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஈடுபட்ட நிலையில், அவர் திடீர் சுகயீனம் அடைந்துள்ளார்.

இதன்பின்னர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு தற்போது சிசிக்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.