மஹிந்தவின் ஆட்சியில் மாத்திரமே பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்-கோட்டாபய

205 0

புலனாய்வு துறை நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மாத்திரமே இந்நாட்டின் பாதுகாப்பை மீள உறுதி செய்ய முடியும் என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மித்தெனிய பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித திருப்தியும் இல்லை எனவும் இராணுவத்தினர் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளினால் தகவல்கள் வழங்கப்பட்டிருந்த போதும் ஏப்ரல் 21 தாக்குதலை தடுப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு முடியாமல் போனதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.