சிவில் நீதிபதி பணிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு; 2016-ல் சட்டப் படிப்பை முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்!

229 0

சட்டப் படிப்பை 2016-ல் முடித்த அனைவரும் சிவில் நீதிபதி பணிக் கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தை 29-ம் தேதி வரை திறந்து வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ல் சட்டப் படிப்பை முடித்த லட்சுமி, சண்முகப்பிரியா, பத்மாவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:

சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக் கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதல்நிலைத் தேர்வு நவம்பர் 24-ம் தேதியும், பிரதான தேர்வு 2020 மார்ச் 28, 29 தேதிகளிலும் நடக்க உள்ளன.

அறிவிப்பாணை வெளியிட்ட தேதி யில் இருந்து 3 ஆண்டுக்குள் சட்டப் படிப்பை முடித்த சட்டப் பட்டதாரி களும், 3 ஆண்டு தொழில் அனுபவம் உள்ள வழக்கறிஞர்களும் அக். 9 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

ஆனால், 2016 செப்டம்பர் 9-ம் தேதிக்கு பிறகு சட்டப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப் பிக்க முடிந்தது. அதற்கு முன்பு முடித்த எங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. இது பாகுபாடு காட்டுவதாக உள்ளதால், 2016-ல் படிப்பை முடித்த எங்களையும் தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந் தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி வினீ்த் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:

மனுதாரர்கள் மட்டுமின்றி 2016-ல் சட்டப் படிப்பை முடித்த அனைவரும் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க தகுதி யானவர்கள்தான். அவர்களும் விண் ணப்பிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி இணையதளம் இன்று (அக்.21) முதல் 29-ம் தேதி வரை திறந்து வைக் கப்பட வேண்டும். இந்த விண்ணப்ப தாரர்கள் 31-ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர் களோடு இவர்களுக்கும் அனுமதிச் சீட்டு உள்ளிட்டவற்றை அனுப்பி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.