கோத்தாவினால் சம்பள உயர்வு தர முடியுமானால் மஹிந்தவால் ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை?

238 0

ஜனா­தி­பதி வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக்ஸ ஜனா­தி­ப­தி­யாக வந்­த­வுடன் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள உயர்வை வழங்க முடியும் என்றால் மகிந்த ராஜ­பக்ஸ ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஏன் சம்­பள உயர்வை பெற்றுக் கொடுக்­க­வில்­லை­யென தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தோட்டக் கமிட்டித் தலை­வர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்­க­ளு­ட­னான  மக்கள் சந்­திப்பு நேற்­று­முன்­தினம்  தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் அட்டன் பணி­ம­னையில் இடம்­பெற்­றது. இதன்­போதே ‍அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கேள்வி எழுப்­பினார்.

சங்­கத்தின் பிரதி நிதிச் செய­லா­ளரும், மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­ன­ரூ­மான சோ. ஸ்ரீதரன் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­னர்­க­ளான சங்­கத்தின் பிரதித் தலைவர் எம். உத­ய­குமார், உப­த­லைவர் எம். ராம், அட்­டன்-­டிக்­கோயா முன்னாள் நகர பிதா டாக்டர் அழ­க­முத்து நந்­த­குமார், தேசிய அமைப்­பாளர் ஜி. நகு­லேஸ்­வரன் உட்­பட பலர் கலந்து கொண்­டார்கள்.

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

இந்த நாட்டின் அடுத்த ஜனா­தி­பதி சஜித் பிரே­ம­தா­ஸவா அல்­லது கோத்­த­பாய ராஜ­பக்­ஸவா என்­ப­தற்­கான  தேர்தல் இன்னும் ஒரு­மா­தக்­கா­ல­கப்­ப­கு­திக்குள்  நடை­பெ­ற­வுள்­ளது. இதை முழு நாட்டு மக்­க­ளுமே எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றார்கள். கோத்­த­பாய வந்தால் என்ன நடக்கும் என்­பது மக்­க­ளுக்கு நன்­றாகத் தெரியும். யாரும் வாய்  திறந்து பேச முடி­யாது. நாட்டில் அடக்கு முறையும் குடும்ப ஆட்­சியும் மீண்டும் தலை தூக்கும் என்­பதை மறந்து விடக் கூடாது.

மலை­யக இந்­திய வம்­சா­வளி மக்கள் நாடற்­ற­வர்­க­ளாக இருந்த போது அவர்­க­ளுக்கு பிர­ஜா­வு­ரிமை வழங்­கி­யவர் இன்­றைய ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் தந்­தை­யா­ரான அமரர் ரண­சிங்க பிரே­ம­தாஸ என்­பதை நாம் நன்­றி­யுடன் நினைவு கூர வேண்டும். அவ­ரது தந்­தையின் வழியில் நாட்டை சுபீட்­ச­மான பாதைக்குக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலை­வ­ரான  சஜித் தேவையா அல்­லது ஆயிரக் கணக்­கான மக்­களை கொன்று குவித்து பெண்­களை வித­வை­க­ளாக்­கிய கொடுங்­கோலர் கோத்­த­பாய தேவையா என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் தீபா­வளிப் பண்­டி­கையை மகிழ்ச்­சி­யோடு கொண்­டாட வேண்டும் என்­ப­தற்­காக கம்­ப­னிகள் வழங்கும் 10 ஆயிரம் ரூபா முற்­ப­ணத்­துக்கு மேல­தி­க­மாக 5 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க நாம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். அதற்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தாகக் கூறி­ய­வர்கள் அது கிடைக்­குமா என்று சந்­த­தேகம் எழுப்­பி­யி­ருந்­தார்கள். அதே­நேரம், அது தேர்தல் காலத்தில் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் இலஞ்சம் என்று மலை­யக அர­சி­யல்­வா­திகள் சுட்டிக் காட்டி கிடைக்க விடாமல் தடுத்து நிறுத்­தி­யுள்­ளார்கள்.

மலை­யக மக்­க­ளுக்­காக நீலிக் கண்ணீர் வடிக்கும் சில அர­சி­யல்­வா­திகள் 3 பாரா­ளு­மன்ற “சீட்” டும் 30 கோடி ரூபா பணமும் கேட்டு அது கிடைக்­காத கார­ணத்தால் மாற்று வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு தரு­வ­தற்கு சென்று விட்­டார்கள். இவர்கள் தான் 83 ஆம் ஆண்டில் இனக் கல­வாரம் ஏற்­பட்­ட­போது தமிழ் மக்கள் ஐ.தே.கட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் கொல்­லப்­பட்­ட­தாகக் பிர­சாரம் செய்து வரு­கின்­றார்கள். அந்த நேரத்தில் இவர்­களின் பெருந்­த­லைவர் அர­சாங்­கத்­தோடு இருந்தார் என்­பதை மக்கள் மறக்­க­வில்லை.

இந்த நிலையில் கோத்­த­பாய ராஜ­பக்ஸ ஜனா­தி­ப­தி­யாக வந்­த­வுடன்  பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாளாந்தம் 1000 ரூபாவை வேத­ன­மாக வழங்கப் போவ­தாக பிர­சாரம் செய்­கின்­றார்கள். இந்த ஆயிரம் ரூபா கோரிக்கை கடந்த 10 வரு­ட­மாக இருந்து வரு­கின்­றது. இதை கம்­ப­னிகள் தான் வழங்க முடி­யுமே தவிர, அர­சாங்­கத்தால் வழங்க முடி­யாது. அவ்­வாறு கோத்­த­பாய ஜனா­தி­ப­தி­யாக வந்து வழங்க முடியும் என்றால் இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ஸவினால் ஏன் வழங்க முடியவில்லை. அவருடைய காலத்திலும் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது அவர் ஏன் கண்டுகொள்ளவில்லை?

எனவே, மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக் கூடாது என்றார்.