நாட்டை பிளவடையச் செய்யும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் 13 நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் அந்த நிபந்தனைகள் எமக்கு இது வரையில் கிடைக்கவில்லை. தமிழ் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்திகள் மூலமாகவே அறியக்கிடைத்தது. அவை எனக்கு கிடைக்கவும் இல்லை. அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.
காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு நிபந்தனைக்கும் கட்டுபடுவதற்கு நாம் தயாராக இல்லை என்னதைத் தெளிவாகக் கூறுகின்றேன். எமக்கு நாடு என்பது மிக முக்கியமானது. அதனை பிளவடையச் செய்வதற்கு இடமளிக்க முடியாது. நாட்டின் தனித்துவ தன்மையை பாதுகாப்பதற்காக பாடுபடுவதற்கு நாம் தயாரா இருக்கின்றோம் என்றும் கூறினார்.
‘வெற்றிகரமான நோக்கு – உழைக்கும் நாடு ‘ என்ற தொனிப் பொருளில் மாத்தறை – தெவிநுவரவில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.