ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று (19) இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அமைச்சர் உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. சிறிதரன், எம். உதயகுமார், எம். ராம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மலையகத்தில் உள்ள தலைவர் ஒருவர் கூறுகிறார் மலையகத்தில் வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு கிராமங்கள் அமைக்க அவர் நினைத்திருந்ததாக கூறுகிறார் அதன் அனைத்தையும் நான் இல்லாமல் செய்ததாக கூறுகிறார்.
நாங்கள் வந்த பிறகுதான் மலையக மக்களுக்கு தனிவீட்டுத்திட்டம் கானி உறுதிபத்திரம் அதிகாரசபை பிரதேச சபை அதிகரித்தல் என்பன பெற்று கொடுத்துள்ளோம். இவ்வளவு நாளாக இவர்கள் தூங்கி கொண்டு இருந்து இன்று பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வருகிறார்கள். நான் தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5000 ரூபா கேட்டிருந்தேன். அதற்கு ஆதரவு வழங்குவதாக கூறிவிட்டு தேர்தல் ஆணையாளரிடம் சென்று முறைபாடு ஒன்றினை செய்து அதனை இல்லாமல் செய்துவிட்டார்கள்.
சஜித் பிரேமேதாச வெற்றிபெற்றால் எமது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் மாற்று கட்சியினர் வந்தால் மக்கள் சுதந்திரமாக வாழமுடியாத ஒரு நிலமை வரும்.
எனவே மலையக மக்கள் தெளிவு பெற்று எதிர்வரும் நவம்பர் மாதம் சஜித் பிரேமேதாசவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெற்று தருவதாக கடந்த பத்து வருடங்களாக கூறி வருகிறார்கள் கம்பனிகார்கள் கூற வேண்டும் ஆயிரம் ரூபா தருவதாக ஜனாதிபதி கூறி ஏற்று கொள்ளமுடியாது
அரசாங்கம் தனியார் கம்பனிக்கு நிதி வழங்கமுடியாது, அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து கொள்ள மலையக மக்கள் சஜித் பிரேமேதாசவுக்கு வாக்களிக்க வேண்டுமென குறிப்பிட்டார்.