நைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் – 8 பேர் பலி

319 0

201610301118331722_8-killed-in-human-bomb-attack-by-female-militants-in-nigeria_secvpfநைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் நடத்திய மனித குண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ‘போகோஹாரம்’ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று வடகிழக்கு நகரமான மைதுகுரியில் பெண் தீவிரவாதிகள் 2 இடங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள்.
முதலாவதாக காலை 6 மணிக்கு மைதுகுரி அருகேயுள்ள பகாசி ராணுவ முகாம் பகுதிக்கு மோட்டார் பொருந்திய ரிக்ஷாவில் சென்ற ஒரு பெண் தீவிரவாதி தன் உடலில் இந்த குண்டை வெடிக்க செய்தாள்.

இதில் அங்கிருந்த 5 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நடந்த 30 நிமிடத்தில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் பொருந்திய ரிக்ஷாவில் சென்ற பெண் தீவிரவாதி குண்டை வெடிக்க வைத்தாள்.

இத்தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர். இந்த 2 சம்பவங்களிலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் காயம் அடைந்துள்ளனர்.