தேர்தல் தொடர்பாக இடையூறு விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக முறைப்பாடளிக்க மாவட்ட ரீதியாக புகார் தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த மையத்தின் புகார்களை வழங்க 01128 62 212, 01128 62 214 மற்றும் 01128 62 217 தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு முறைபாடளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் குறித்த புகார்களை 0112868526 அல்லது 0112868529 என்ற பெக்ஸ் மூலமாகவும்,0719 160 000 என்ற வைபர் அல்லது வாட்ஸ்அப் எண்களுக்கும் புகார் வழங்கலாம் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.