ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா நகரச் சிறையின் மீது அராபிய கூட்டுப்படைகள் நடத்திய விமான தாக்குதலில் 33 பேர் பலியாகினர்.ஈரான் அரசின் ஆதரவுபெற்ற ஹவுத்தி இனப் போராளிகள் ஏமன் நாட்டில் நடைபெற்றுவந்த அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டதையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.
அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அராபிய கூட்டுப்படைகள் ஹவுத்தி இனப் போராளிகள் மீது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
அவ்வகையில், அல்-ஜைதியா மாநிலத்தில் உள்ள ஹொடைடா நகரச் சிறையின் மீது அராபிய கூட்டுப்படைகள் நேற்று மாலை நடத்திய விமான தாக்குதலில் 33 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.