ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
விசேட நாளை கூட்டம் நடைபெறவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஏற்கனவே அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சில முக்கியமான தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
கட்சியை வலுப்படுத்திக் கொள்வதே இதன் நோக்கமாக அமைந்துள்ளது.
எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கக்கூடிய வகையில் கட்சியின் பொறிமுறைமையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.