தப்பியோடிய கைதிகளால் வேலையினை இழந்த பொலிஸ் அதிகாரிகள்

308 0

p1000865நீர்கொழும்பு தலுபொத சிறைச்சாலையில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று அதிகாரிகளுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துசார உபுல் தெனியாய தெரிவித்துள்ளார்.

குறித்த கைதிகள் நேற்று அதிகாலை நீர்கொழும்பு தலுபொத சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் அறியாமை காரணமாகவே கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதது.

இதன் காரணமாகவே சிறைச்சாலையில் உள்ள மூன்று அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

தப்பிச் சென்ற கைதிகள் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.