ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துதருமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கொக்குவில் வைத்து இரண்டு மாணவர்கள் பொலிஸாரால் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணையை கோருவதற்காகவே இந்த சந்திப்புக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உரிய விசாரணைக்கான தமது கோரிக்கையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சுமார் ஐயாயிரம் மாணவர்கள் கடந்த ஒருவார காலமாக விரிவுரைப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.