விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

295 0

mihin-lankaமிஹின் லங்கா விமான சேவை தமது புதிய சேவைகளை ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக இன்று(30) முதல் புதியதாக 12 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த காலங்களில் குறித்த 12 விமான சேவைகளும் மிஹின் லங்கா நிறுவனத்தின் ஊடாக வழிநடத்தி வரப்பட்டன. தற்போது மிஹின் லங்கா நிறுவனம் ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதையடுத்து இன்று தொடக்கம் புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மிஹின் லங்கா சேவைகள் நேற்றோடு உத்தியோகபூர்வமாக கைவிடப்பட்டதையடுத்து குறித்த நிறுவனம் வழிநடத்திய சிசெல்ஸ், மஸ்கட், டாக்கா, பஹ்ரைன், சென்னை, கல்கத்தா உட்பட மிக முக்கிய நகரங்களுக்கான சேவைகளே இன்று முதல் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.