311 இந்தியர்களை நாடுகடத்தியது மெக்சிக்கோ

303 0

மெக்சிகோ நாட்டில் தங்குவதற்கான வீசா மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத 311 இந்தியர்களை, அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

 

மெக்சிகோவின் எல்லைகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் மக்கள் மீது மெக்சிக்கோ அரசு நடவடிக்கை எடுக்காவிடில், மெக்சிகோவின் அனைத்து இறக்குமதி பொருட்கள் மீதான வரிகள் அதிகமாக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், மெக்சிகோ அதிகாரிகள் எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மெக்சிகோ நாட்டில் , உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியிருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கான அனுமதி இல்லாமல் தங்கி இருந்த 311 இந்தியர்களை டோலுகா நகரிலிருந்து போயிங் 747 விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பியது.