இலங்கை – இந்­திய உறவு வானத்தை தொட்­டு­விட்­டது – இந்­திய உயர்ஸ்­தா­னிகர்

286 0

பலாலி சர்­வ­தேச  விமான நிலையம் உரு­வாக்­கப்­பட்டு தென்­னிந்­திய – யாழ். விமான சேவைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதன்­மூ­ல­மாக இலங்கை –இந்­திய உறவில் மேலு­மொரு மைல்கல் எட்­டப்­பட்­டுள்­ள­தாக இந்­திய   உயர்ஸ்­தா­னிகர் தரன்ஜித் சிங் சந்து தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால்  யாழ்ப்­பாணம் பலாலி  சர்­வ­தேச விமான நிலையம் நேற்று அங்­கு­ரார்ப்­பணம் செய்­து­வைக்­கப்­பட்­டது. இந்த நிகழ்வில் பிர­தமர் ரணில்  விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அர­சியல் பிர­மு­கர்கள் கலந்­து­கொண்­டனர்.  நிகழ்வில் உரை­யாற்­றிய இந்­திய   உயர் ஸ்தானிகர் கூறு­கையில்,

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வா­னது தற்­போது வானத்தை தொட்­டி­ருப்­ப­தாக நினைக்கி றேன். அத்­துடன் இந்த முத­லா­வது விமான சேவை, இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான மக்கள் – உற­வுக்­கான அர்ப்­ப­ணிப்பு தொடரும் என்­ப­தற்­கான மற்­றொரு உதா­ர­ண­மாகும். இரு­நாட்டு நட்­பு­றவு, அபி­வி­ருத்தி, கூட்­டு­றவு என்ற விட­யங்­களும் வெளிப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் மக்கள் தொடர்பின் ஆழத்தை மேலும் வலு­வாக்க வேண்­டி­யதிலுள்ள பகி­ரப்­பட்ட அர்ப்­ப­ணிப்­பையும் இது பிர­தி­ப­லிப்­ப­தாக அமை­கின்­றது. இதில் வடக்கு மக்­களின் கல்வி, சுகா­தாரம், வீட்­டுத்­திட்டம், தகவல் தொழில்­நுட்பம் மற்றும் கலா­சார மத்­திய நிலையம் என்ற வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை  அபி­வி­ருத்தி செய்யும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதன் வேலைகள் முடிந்­த­வுடன்  நிரந்­தர வர்த்­தக துறை­மு­க­மாக இவை இயங்கும். அதேபோல் இப்­போது விமா­ன­நி­லை யம் உரு­வாக்­கப்­பட்­ட­தன் மூல­மாக தென்­னிந்­திய யாழ்ப்­பாணம் சேவை மேலும் பல­ம­டைந்­துள்­ளது. இலங்­கையின் வர­லாற்றில் இது ஒரு மைல்­கல்­லாக பதி­யப்­பட்­டுள்­ளது. சென்னை – யாழ்.  விமா­ன­சேவை உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது,  பொரு­ளா­தார ரீதி­யிலும் சுற்­றுலா ரீதி­யிலும் பாரிய பல­மாக அமையும். இந்­திய சுற்­றுலா பய­ணிகளை இங்கு வரு­மாறு நான் அழைப்பு விடுக்­கின்றேன்.

எமது மனங்­களில் இலங்­கைக்கு எப்­போதும் சிறப்­பிடம் உள்­ளது. 2015 இல் இந்­தியப் பிர­தமர்  நரேந்­திர மோடி வருகை தந்­த­போது இந்­தி­யா­வுக்­கான எதிர்­காலம் குறித்த எனது கனவு எமது அய­ல­வர்­க­ளுக்­கு­மா­னது” என்று கூறினார்.  அதுபோல் இந்­திய உயர் துறையில் சில­ரது முழு­மை­யான ஒத்­து­ழைப்பும் இருந்­தது. திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முயற்சி திருவினையாக்கும் என கூறியுள் ளார். அந்த வாக்குக்கு அமைய நாம் முன்னெடுத்த முயற்சி இன்று எமக்கு கைகொடுத்துள்ளது. அந்த கடுமையான முயற்சியின் பயனாக இன்று வானுயர்ந்த உறவு பலமடைந்துள்ளது என்றார்.