ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பத்து நாட்களுக்குள் 851 முறைப்பாடுகள் !

252 0

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தற்போது நடளாவிய ரீதியில் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளின் போது இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் குறித்து  அவதானம் செலுத்தி வரும் தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரையில் 851 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 4 மணியிலிருந்து புதன்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 24  மணித்தியாலத்திற்குள் தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 89 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 81 முறைபாடுகள் தேர்தல் சட்டதிட்டங்களை மீறியதாகவும் , 6 முறைப்பாடுகள் தேர்தல் காலங்களில் இடம்பெறும் வெவ்வேறு முரண்பாடுகளின் காரணமாகவும் வன்முறைகள் தொடர்பில் இரு முறைபாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் 4 மணிவரையான பத்து நாட்களுக்குள் 851 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருக்கும் தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையம் , இதன்போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 814 முறைப்பாடுகளும், வெவ்வேறு தேர்தல் முரண்பாடுகளின் காரணமாக 29 முறைப்பாடுககளும், மற்றும் எட்டு முறைபாடுகள் தேர்தல் வன்முறைகள் தொடர்பிலும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.