யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி நாளை விஜயம்

306 0

37811தாம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை யாழ்ப்பாண விஜயத்தை மேற்கொள்ளும்போது பலாலி தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியின் 454 ஏக்கர் நிலத்தை விடுவிக்கும் அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாண கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்கவின் தகவல்படி பலாலியின் விமான ஓடுப்பாதைக்கு மேற்கே அமைந்துள்ள காணியே விடுவிக்கப்படவுள்ளது.

இதன்படி குறித்த பிரதேசத்தில் அமைந்திருந்த இராணுவத்தின் இரண்டு முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.

இந்தக்காணி விடுவிக்கப்படுமிடத்து 2015ஆம் ஆண்டில் இருந்து இராணுவத்தினரால், 1927.6 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்றும் கட்டளை தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தினாரால் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட 100 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிப்பார்.