ஹங்வெல்ல கொலைசம்பவத்துடன் தொர்புடைய சந்தேக நபர்கள் இருவர் மிரிகான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
தெடிகமுவ, கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 22, 26 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 15 ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் கூறிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்துள்ளதுடன் , இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மூன்று சிம் அட்டைகளும் மூன்று கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.