97 தமிழர்களுக்கு விளக்கமறியல்

317 0

andhra_2750414fஇந்தியாவின் ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதன்படி, அவர்களை எதிர்வரும் 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆந்திராவில் வனப்பகுதியில் இவர்கள் அனைவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் வெட்டிய செம்மரக்கட்டைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டதாகவும் ஆந்திர காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

இந்தநிலையில், நேற்று நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட இவர்கள் இவ்வாறு விளக்கமறியல் தண்டனை பெற்றுள்ளனர்.