சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் ஆஜர்

4727 0

201606300938285984_statue-smuggling-subhash-chandra-kapoor-appear-in-court_SECVPFஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா சித்தமல்லி வரதராஜபெருமாள் கோவில் மற்றும் விக்கரமங்கலத்தில் உள்ள கோவிலிலும் கடந்த 2008-ம் ஆண்டு பல ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு போனது. இதுகுறித்து உடையார் பாளையம், விக்கிரமங்கலம் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மேல் விசாரணையை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் நடத்தினர். இதில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர், மார்ச்சாமி, பாக்கியகுமார், ஸ்ரீராம்(எ)சுனுகு, பார்த்திபன், பிச்சைமணி ஆகிய 7 பேரை கைது செய்தனர். இதில் பிச்சைமணி அப்ரூவராக மாறினார்.

இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவா 5 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும், மார்ச் 4 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும், ஏப்ரல் 11-ந் தேதியும், ஜூன் 16-ந்தேதியும் நடைபெற்றன. இந்தநிலையில் வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

இதற்காக திருச்சி மத்திய சறையில் இருந்து சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திர கபூரை துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பாஸ்கரன், வருகிற 13-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து சுபாஷ் சந்திர கபூரை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

Leave a comment