44 ஆயிரத்து பேருக்கு டெங்கு

304 0

1416383666mosquito_0இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 44 ஆயிரத்து 171 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் கடந்த வருடத்தில் குறித்த காலப்பகுதியில் 23 ஆயிரத்து 327 டெங்கு தொற்றாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர்.

இதன்படி, ஒப்பிட்டளவில், டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் 20ஆயிரத்து 844ஆக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவற்றுள் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 13ஆயிரத்து 703 பேர் டெங்கு தொற்றாளர்களாக காணப்படுகின்றனர்.

நாட்டில், கடந்த ஐ_லை மாத்திலேயே அதிகரித்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவானது.

அந்த காலப்பகுதியில் 10ஆயிரத்து 636 பேர் டெங்கு தொற்றாளர்களாக பதிவாகியிருந்தனர்.

இந்தநிலையில் மழையுடன் கூடிய காலநிலையின் போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் எனவும் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.